இணையவழிக் கற்கைகளின் போது பிள்ளைகள் மீது அதிக அக்கறை பெற்றோருக்குத் தேவை!!

இணையவழிக் கல்வி முறை மூலம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கல்வி வகுப்புகளுக்கு அனுமதிக்கும் போது நடக்கும் நடவடிக்கைகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பில் தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் முடித விதானபத்திரண தெரிவித்துள்ளதாவது;

இணையவழிக் கற்பித்தலில் சிறுவர்கள் துர்நடத்தைக்கு உள்படுத்தப்படுவதாக பல தகவல்கள் கிடைத்துள்ளன.

இணையவழிக் கல்வி முறை மூலம் கல்வி வகுப்புகள் நடத்தும் போது 15 வயது சிறுமியின் நிர்வாண ஒளிப்படம் எடுத்ததாக பாணந்துறை திகலா பகுதியில் பயிற்சி வகுப்பு ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

சிறுமியின் தாயார் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரியிடம் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சிறுவர்கள் இணையவழி பயிற்சி வகுப்புகளுக்கு உட்படுத்தப்பட்ட இதுபோன்ற பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன- என்றார்.

Related Posts