இணையம் தொடர்பாக 2600 முறைப்பாடுகள்

இந்த வருடம் நவம்பர் மாதம் வரை இணையம் சம்பந்தப்பட்ட முறைப்பாடுகள் 2600 கிடைத்துள்ளதாக கணினி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது.

இவற்றில் அதிகமானவை சமூகவலைத்தளங்கள் தொடர்பிலேயே கிடைக்கப் பெற்றுள்ளதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவிக்கின்றார்.

தமது பெயர்களில் வேறு நபர்கள் போலி கணக்குகளை உருவாக்கி இருப்பது தொடர்பான முறைப்பாடுகள் அதிகளவில் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் அந்த போலிக் கணக்குகள் தொடர்பாக குறித்த இணையத்தளங்களுக்கு அறியக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதன்போது அந்தப் போலிக் கணக்குகளை நீக்குவதற்கு குறித்த இணையத்தளங்கள் நடவடிக்கை எடுக்கும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts