இணையத்தை பயன்படுத்தி பொருட் கொள்வனவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பொருட்களை இறக்குமதி செய்யும் நபர்களது பணம், இணையங்கள் ஊடாக கொள்ளையிடப்பட்டு பிறிதொரு வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுவதாக அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது.

இலங்கை கனணி அவசரப் பிரிவுக்கு இது தொடர்பில் முறைபாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

மின்னஞ்சல் ஊடாக பொருட்களை பதிவு செய்யும் நபர்கள் இந்த மோசடிக்குள் சிக்கியுள்ளதாக கனணி அவசரப்பிரிவின் ஊடகப் பேச்சாளரும், பொறியியலாளருமான ரொஷான் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.

பொருட்களை தருவிப்பவர்களின் மின்னஞ்சல் கணக்குகளில் பலவந்தமாக நுழையும் கொள்ளையர்கள், அந்த நபர்களின் கணக்குகளில் மாற்றங்களை செய்துள்ளதாக அறிவித்து, அதனூடாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் பணங்களை வைப்பிலிடுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான பணம் கொள்ளை தொடர்பில் இந்த வருடத்தில் இதுவரை 10 இற்கும் அதிகமான முறைபாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts