இணையத்தில் வெளியான கபாலி பாடல்

ரஜினி நடிப்பில் தற்போது உருவாகிவரும் படம் ‘கபாலி’. இப்படத்தை ரஞ்சித் இயக்கி வருகிறார். சென்னையில் தொடங்கிய முதற்கட்ட படப்பிடிப்பு தொடர்ந்து மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தினார்கள். அடுத்த கட்டமாக கோவா செல்ல படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் பாடல் ஒன்று இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது. இது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மலேசியாவில் ஒரு பாடல் படமாக்கப்பட்ட போது, அங்குள்ள படப்பிடிப்பில் இருந்து பாடலை பதிவு செய்து இணையத்தில் யாரோ வெளியிட்டு இருக்கிறார்கள். 2 நிமிடங்கள் அடங்கிய அப்பதிவு வாட்ஸ்-அப் மூலமாக பகிரப்பட்டு வருகிறது. இதனால் படக்குழு மிகவும் அதிர்ச்சியில் இருக்கிறது.

இப்படத்தில் ரஜினியுடன் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்து வருகிறார்.

Related Posts