இணையத்தில் கசிந்த ‘ஐ’ படத்தின் கதை. ஷங்கர்-விக்ரம் அதிர்ச்சி

விஜய் நடித்த ‘நண்பன்” படத்திற்கு பின்னர் கடந்த இரண்டு வருடங்களாக ஷங்கர் பிரமாண்டமாக இயக்கி வரும் திரைப்படம் ‘ஐ’. இந்த படத்தில் விக்ரம், எமி ஜாக்சன் ஆகியோர்கள் நடித்துள்ளனர். ஷங்கர் படம் என்றால் கதையின் ஒன்லைன் கூட வெளியே கசியாது என்ற நிலைதான் இதுவரை இருந்து வந்தது.

Shankar-I-first-look-photos

ஆனால் ‘ஐ’ படத்தின் கதை முழுவதும் கிட்டத்தட்ட இணையத்தில் கசிந்ததாக வந்த செய்தியை அடுத்து ஷங்கர் மற்றும் விக்ரம் ஆகியோர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

குத்துச்சண்டை வீரர் ஒருவர் பழிவாங்குவதுதான் மெயின் கதை என்றும், இந்த படத்தில் ஹெல்த் கேர் துறையில் நடைபெறும் முறைகேடுகளை விரிவாக அலசுவதான் கதை என்றும் பிரபல ஆங்கில இணையதளம் ஒன்று கதையை விரிவாக கூறியுள்ளது.

மேலும் இந்த படத்தின் கதை ஜெயம் ரவி நடித்து வெளிவர இருக்கும் பூலோகம் படத்தின் கதையையும், ஏற்கனவே சூர்யா இருவேடங்களில் நடித்து வெளியான ‘மாற்றான்” கதையையும் கலந்து உருவாக்கப்பட்டது போல உள்ளதாகவும் அந்த இணையதளம் கருத்து தெரிவித்துள்ளது.

ஜெயம் ரவியின் பூலோகம் ஷங்கர் ‘ஐ’ படத்திற்கு முன்னால் ரிலீஸ் ஆகிவிட்டால் கண்டிப்பாக ‘ஐ’ படம் படுதோல்வியை சந்திக்கும் என அந்த இணையதளம் கருத்து தெரிவித்துள்ளதால் ‘ஐ’ படத்தின் தயாரிப்பாளர் கடும் அதிர்ச்சியில் உள்ளார். இந்த படத்தின் பட்ஜெட் தற்போது ரூ.100 கோடியயை தாண்டிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம், எமி ஜாக்சன், சுரேஷ் கோபி, சந்தானம், ஆகியோர் நடித்திருக்கும் ‘ஐ’ படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுத்தாளர்கள் சுபா எழுதியுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவு இயக்குனராக பி.சி.ஸ்ரீராம் பணிபுரிந்துள்ளர். ஆஸ்கார் ரவிச்சந்திரன் இந்த படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் கெளரவ வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts