இணையத்தளங்களில் வெளிவரும் செய்திகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கும் அவசியம் இல்லையெனவும், அதற்காக நேரம் ஒதுக்குவது வீணானது எனவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (01) நடைபெற்ற மாதாந்த அமர்பில், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தொடர்பில் முன்னாள் மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா கருத்துத் தெரிவித்துள்ளதாக வெளியான செய்தி தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இணையத்தளங்களில் வெளியாகும் செய்திகளை எந்த அடிப்படையில் வைத்து பதில் சொல்ல முடியும். கத்துக்குட்டிகள் கூறும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது.
சி.வி.கே. சிவஞானம், மாநகர ஆணையாளராக இருந்த காலத்தில் மாநகர சபை ஊழல்கள் இடம்பெற்றதாகவும், சி.வி.கே. சிவஞானத்தின் மகளுக்கு, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா வங்கியில் வேலை வாங்கிக் கொடுத்தாகவும் யோகேஸ்வரி கூறியதாக, இணையத் தளங்களில் செய்தி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.