பொலிஸ் நற்சான்றிதழ் அறிக்கையை (clearance) இன்று முதல், இணையத்தளத்தின் மூலம் துரிதமாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்று, பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தப் புதிய இணையத்தளம், பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
இந்தப் புதிய நடைமுறைக்கு அமைவாக, இன்று முதல் www.police.lk என்ற இணையத்தளத்தினூடாக, பொலிஸ் நற்சான்றிதழுக்கான விண்ணப்பப்படிவத்தினைச் சமர்ப்பித்து, துரிதமாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்று, பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
தகவல் பரிவர்த்தனை தொழில்நுட்ப முகவர் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு என்பன இணைந்து, இந்த இணையத்தள வசதியினை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த சேவையின் ஊடாக, தேவையற்ற அலைச்சல் மற்றும் காலதாமதம் உள்ளிட்டவற்றை தவிர்த்துகொள்ள முடிவதுடன், பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையிலான உறவினை வலுப்படுத்தும் வகையில், இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.