Ad Widget

இணையத்தளத்தில் ஊழியர் சட்ட விதிமுறைகள் பற்றிய விபரங்கள்

ஊழி­யர்கள் மற்றம் தொழி­லா­ளர்கள் மத்­தியில் தமது உரி­மைகள் மற்றும் கட­மைகள் தொடர்­பான விழிப்­பு­ணர்வை மேம்­ப­டுத்தும் வகையில் Salary.lk இணை­யத்­த­ளத்தில் இலங்­கையின் ஊழியர் சட்ட விதி­மு­றைகள் பற்­றிய விவ­ரங்கள் தமிழ் மற்றும் சிங்­கள மொழி பெயர்ப்­பு­களை உள்­ள­டக்­கி­யுள்­ள­தாக சர்­வ­தேச தொழில் ஸ்தாபனம் (ILO) அறி­வித்­துள்­ளது.

இலங்­கையின் தொழி­லாளர் சட்ட விதி­மு­றைகள் பற்­றிய தெளிவான விவ­ரங்­களை இந்த இணை­யத்­தளம் கொண்­டுள்­ள­துடன், தொழில் பிரி­வுகள் அடிப்­ப­டையில் சம்­ப­ளங்கள் பற்­றிய ஒப்­பீட்டு ஆய்­வுகள் மற்றும் தொழில் ஆலோ­சனை போன்ற விவ­ரங்கள் ஆகி­ய­வற்றை வழங்கும் வகையில் இந்த இணை­யத்­தளம் அமைந்­துள்­ளது. இந்த இணை­யத்­த­ளத்தை Wage Indicator Foundation முன்­னெ­டுத்­தி­ருந்­தது.

சர்­வ­தேச தொழில் ஸ்தாப­னத்தின் இந்த புதிய செயற்­பாட்­டுக்கு முன்­ன­தாக, தேசிய தொழில் சட்ட விதி­மு­றைகள் ஆங்­கில மொழியில் மட்­டுமே காணப்­பட்­டன. குறிப்­பாக இலங்கை தொழில் திணைக்­க­ளத்தின் இணை­யத்­த­ளத்தில் பார்­வை­யி­டக்­கூ­டி­ய­தாக இருந்­தது. ஆனாலும், இலங்­கையின் இணையப் பாவனை அதி­க­ரித்துச் செல்லும் நிலை­யிலும், மொபைல் இணைய பாவ­னை­யா­ளர்கள் அதி­க­ரித்துச் செல்லும் நிலை­யிலும், Salary.lk இணை­யத்­த­ளத்தில் இந்த மேல­திக இணைப்­புகள் சேர்க்­கப்­பட்­டுள்­ளன.

இவற்றின் மூலம் ஊழி­யர்கள் சட்ட விதி­மு­றைகள் குறித்த விழிப்­பு­ணர்­வுகள் பாவ­னை­யா­ளர்­க­ளுக்கு நட்­பு­ற­வான வகையில் வழங்­கப்­பட்­டுள்­ளன.

Related Posts