இணையத்தளங்களுக்குள் ஊடுருவி தரவுகளில் மாற்றம் ஏற்படுத்தியமை தொடர்பில் சில முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணனி பாதுகாப்பு அவசர அழைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இணையத்தளங்களின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களை அவதானத்துடன் இருக்குமாறு இலங்கை கணனி பாதுகாப்பு அவசர அழைப்புப் பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அத்துடன், குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை கணனி பாதுகாப்பு அவசர அழைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு தரவுகள் மாற்றப்பட்ட இணையத்தளங்களுக்குள் நாட்டின் தனியார் மற்றும் அரச நிறுவனங்களும் உள்ளடங்குகின்றன.
இதேவேளை, குறித்த நிறுவனங்களின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதே இணையத்தளங்களுக்குள் ஊடுருவும் நபர்களின் நோக்கமாக அமைந்துள்ளது என சர்ட் எனப்படும் கணனி அவசர அழைப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
இணையத்தளங்களின் பாதுகாப்புக் கட்டமைப்பில் காணப்படும் குறைபாடுகள் காரணமாக இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க வாய்ப்புக்கள் கிடைப்பதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.