இணையதளத்தை கலக்கும் தனுஷின் தங்கமகன் டிரைலர்

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘தங்கமகன்’. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையைமைத்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியானது. தனுஷ்-அனிருத் கூட்டணியில் வெளியான மெலோடி பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இது படம் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகியுள்ளது.

இதில் தனுஷ் முதலில் எமி ஜாக்சனை துரத்தி துரத்தி காதலிப்பதும், பின்னர் அம்மாவின் விருப்பத்தால் சமந்தாவை கல்யாணம் செய்து அவருடன் சந்தோஷமாக வாழ்வது போலவும் காண்பித்திருக்கிறார்கள். நடுவில் தந்தை கே.எஸ்.ரவிக்குமாருக்கு விபத்து ஏற்படுவதும், பிறகு தனுஷ் ஆக்‌ஷன் ஹீரோவாக களம் இறங்குவதுமாகவும் டிரைலரில் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் தனுஷ் தமிழ் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த டிரைலரில் தமிழை யாராலும் அழிக்க முடியாது என்று வசனம் பேசுகிறார். தற்போது இந்த டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சமூக வலை தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

Related Posts