இணுவில் விபத்து: பொலிஸ் உத்தியோகத்தர் கைது

இணுவில் பகுதியில் விபத்தை ஏற்படுத்தி சிறுவனொருவரின் உயிரிழப்பிற்கு காரணமாக விளங்கிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Business crime

குறித்த பொலிஸ் அதிகாரி இன்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைகளை தொடர்ந்து அவரை மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸாரால் தெரிவித்துள்ளனர்.

இணுவில் பகுதியில் தைப்பொங்கல் தினத்தன்று இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் படுகாயமடைந்த நிலையில், அவர்களில் 12 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவ்விபத்தில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரும் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

விசாரணைகளில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் செலுத்திவந்த முச்சக்கரவண்டி மோதியதிலேயே விபத்து சம்பவித்திருப்பதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்தே அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Posts