யாழ். வல்வெட்டித்துறையில் இன்று திங்கட்கிழமை அதிகாலை இடி வீழ்ந்ததில் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன், மற்றையவர் படுகாயமடைந்துள்ளார்.
யாழ். வல்வெட்டித்துறை கடலில் மீன்பிடிப்பதற்குச் சென்ற மீனவர்கள் இருவர் மீதே இடி வீழ்ந்துள்ளதாக வல்வெட்டித்துறை ஆதி கோவில் மீனவர் சங்கத் தலைவர் எம்.மதியழகன் தெரிவித்தார்.
வல்வெட்டித்துறை ஆதி கோவிலடிப் பகுதியைச் சேர்ந்த தங்கவேலாயுதம் அருள்ராஜ் (வயது 19) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வல்வெட்டித்துறை ஆதி கோவிலடிப் பகுதியைச் வல்லிபுரம் சிவபாலன் (வயது 27) என்பவரே படுகாயமடைந்துள்ள நிலையில் வல்வெட்டித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இம்மீனவர்கள் இருவரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிக்கு மீன்பிடிப்பதற்கு வல்வெட்டித்துறை கடலுக்குச் சென்றதாகவும் இந்நிலையிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகவும் வல்வெட்டித்துறை ஆதி கோவில் மீனவர் சங்கத் தலைவர் எம்.மதியழகன் தெரிவித்தார்.