இடி மின்னல் – தொலை பேசி பாவனை அவதானம்

இடி மின்னலுடனான காலநிலையில் வெளியிடங்களில் கையடக்க தொலை பேசிகளை பாவிக்கும் போது அவதானத்துடன் செயற்படுமாறு தொலை தொடர்புகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

cell-phone-zoom

தொலை தொடர்புகள் ஆணைக்குழுவின் வலையமைப்பு பணிப்பளர் ஹெலசிறி ரணத்துங்க இவ்வாறு தெரிவித்தார்.
கையடக்க தொலை பேசிகளின் ஊடாக மின்னல் தாக்கம் செலுத்த வாய்ப்புகள் இல்லை.

எனினும் உலோகங்கள் நிறைந்த பிரதேசங்களில் நிற்கும் போது மின்னல் தாக்கலாம் என அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில் நாட்டில் நிலவும் இடைக்கால பருவப்பெயர்ச்சி காரணமாக இது வரையில் 8 பேர் பலியாகியுள்ளனர்.

மாத்தறை – தெனியாய – மொரவக்க பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் பலியாகி 4 பேரின் மரண விசரணைகள் இன்று இடம்பெறவுள்ளன.

Related Posts