சர்ச்சைக்குரிய என்றிக் இலக்சீயஸின் இசை நிகழ்ச்சியின் போது மது அருந்தியிருந்த பெண் ஒருவர் தமது கச்சையை கழற்றி எறிந்த சம்பவம் மற்றும் அனுமதிப்பத்திரம் இல்லாமல் நிகழ்ச்சியின் போது மது விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்
இந்த நடவடிக்கைகள் இலங்கையின் கலாசாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் திகதி செக்ஸ் என்ட் லவ் என்ற பெயரில் இந்த இசைநிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தநிலையில் பௌத்த பிக்குவான புதுகல ஜினவன்ச தேரர் செய்த முறைப்பாட்டுக்கு இணங்கவே இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்த்தன ஆகியோர் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.