இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் நடிகர் ஆகிறார்

இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் நடிகராக மாறிவிட்டனர். பல வெற்றி படங்களையும் கொடுத்து வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் இடம் பிடித்துள்ளார்.

தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இவர் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். பிரபல தெலுங்கு விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான தில் ராஜு சமீபத்தில் நடந்த விழாவின் போது, தேவிஸ்ரீ பிரசாத் நாயகனாக நடிக்கும் படத்தை தான் தயாரிப்பதாக தெரிவித்தார்.

இயக்குனர் சுகுமார் இந்த படத்தை இயக்குகிறார். மற்ற நடிகர்கள் விரைவில் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். இசையமைப்பாளராக வெற்றி பெற்ற தேவி ஸ்ரீ பிரசாத், கதாநாயகாகவும் வெற்றி பெறுவார் என்று திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

Related Posts