சினிமாவில் பின்னணி பாடும் வாய்ப்புகள் குறைந்த பிறகு வெளிநாடுகளில் தனது மகன் எஸ்.பி.பி.சரணுடன் இணைந்து பிரமாண்டமாக இசைக்கச்சேரிகளிளல் நடத்தி வருகிறார் எஸ்.பி.பாலசுப்ரமணியம். அந்த வகையில், வெளிநாடு களில் கச்சேரிகள் மூலம் ஆண்டுக்கு ரூ. 20 கோடி வரை சம்பாதிக்கிறாராம் எஸ்.பி.பி., இந்த ஆண்டும் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் எஸ்.பி.பி-50 என்ற பெயரில் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார் எஸ்.பி.பால சுப்ரமணியம்.
ஆனால் அமெரிக்காவில் அவரது இசை நிகழ்ச்சி நடந்து வந்தபோது தனது இசையில் உருவான பாடல்களை மேடையில் பாடக்கூடாது என்று அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் இளையராஜா. அதற்கு ஆரம்பத்தில் கங்கை அமரன் உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேசமயம், சில இசைய மைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், தயாரிப்பாளர்கள் இளையராஜாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஒரு பாடல் உருவாவதற்கு இசையமைப்பாளர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், பாடகர்கள் என பலரும் காரணமாக இருக்கின்றனர். அதனால் பாடல்களுக்கான காப்பி ரைட்ஸ் அனைவருக்குமே கிடைக்க வேண்டும் என்று கூறினார். அதற்கு இளையராஜா பிள்ளையார் சுழி போட்டதற்கு நன்றி தெரிவித்தனர்.
இந்நிலையில், இனிமேல் திருமணம், கோயில் விழாக்களில் பாடும் பாடல்கள் தவிர, டிக்கெட் போட்டு நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகளில் பாடும் பாடல்க ளுக்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு காப்பி ரைட்ஸ் கொடுக்க வேண்டும் என்று தற்போது கோலிவுட்டில் அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். அதன்காரணமாக, இன்று காலை தமிழ்த்திரைப்பட இசையமைப்பாளர் சங்கத்தில் இருந்து இளையராஜாவை சந்திக்கிறார்கள். அப்போது, இந்த காப்பி ரைட்ஸ் குறித்து முதலில் குரல் கொடுத்ததற்காக இளையராஜாவுக்கு நன்றி தெரிவிப்பதோடு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கிறார்களாம்.