இசையமைப்பாளர் எம்.எஸ்.வி காலமானார்

பழம்பெரும் தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார்.

உடல் நலக் குறைவால் சென்னையிலுள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், அதிகாலை 4.15- அளவில் இவ் உலகை விட்டு நீங்கினார்.

MSV

அவருக்கு வயது 84. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 1,200 படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

ராமமூர்த்தியுடன் சேர்ந்து 700 படங்களுக்கும், தனியாக 500 படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

அன்னாரது பூதவுடல் சென்னை சாந்தோமிலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. அவரது இறுதி சடங்கு நாளை பெசன்ட் நகர் மயானத்தில் நடைபெறும் என அவரது மகன் தெரிவித்துள்ளார்.

Related Posts