இசையமைப்பாளராக அவதாரமெடுக்கும் சிம்பு

சந்தானம் நடிக்க இருக்கும் “சக்க போடு போடு ராஜா” படத்திற்கு சிம்பு இசையமைக்க உள்ளார்.

நடிகராக தமிழ் திரையுலகில் அறிமுகமானாலும் தனது தந்தை விஜய.டி.ராஜேந்தரைப் போலவே,சிம்புவுக்கு பன்முகத் திறமை உண்டு. குறிப்பாக பாடல்,இசை ஆகியவற்றில் அவருக்கு நல்ல பரிட்சயம் உண்டு.

இதுவரை பாடகராக மட்டுமே அறியப்பட்டு வந்த சிம்பு,தற்போது சந்தானத்தின் சக்க போடு போடு ராஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார்.

இதனை தங்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் சிம்புவும்,சந்தானமும் அறிவித்துள்ளனர்.”எனது காட் பாதர் சிம்பு முதன்முறையாக எனது சக்க போடு போடு ராஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.எனது வாழ்த்துகள்.”என சந்தானம் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

”முதன் முறையாக சக்க போடு போடு ராஜா படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளேன்.இது சந்தானத்திற்காக மட்டும்தான்.புதிய பயணம் துவங்குகிறது.உங்களுடைய அன்பும் ஆதரவு தேவை.”என சிம்பு தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான “இது நம்ம ஆளு” திரைப்படத்தில் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts