இங்கிலாந்தை சொந்த மண்ணில் வென்ற பாகிஸ்தான் (காணொளி இணைப்பு)

நேற்று நிறைவடைந்த பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட்போட்டியில் 75 ஓட்டங்களால் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது.

Pakistan's victory 1

இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 339 ஓட்டங்களை பெற்றது.

இங்கிலாந்து அணி தனது முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கட்டுகளையும் இழந்து 272 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டும் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 215 ஓட்டங்களை பெற்றதுடன், இங்கிலாந்து அணி 207 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற நிலையில் சகல விக்கட்டுகளையும் இழந்தது.

இதன்படி 75 ஓட்டங்களால் பாகிஸ்தான அணி வெற்றிபெற்றுள்ளது.

இதேவேளை, வெற்றிக்கு பின்னர் பாகிஸ்தான் அணி மைதானத்தில் தனது வெற்றியை கொண்டாடிய விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

அந்த காணொளி கீழே…

Related Posts