Ad Widget

இங்கிலாந்து புதிய பிரதமராக தெரசா மே பதவி ஏற்றார்

இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்த ஐரோப்பிய யூனியனில் நீடிக்கலாமா? வேண்டாமா? என்ற வாக்கெடுப்பில் பிரதமர் டேவிட் கேமரூன் கருத்துக்கு எதிராக விலக வேண்டும் என்ற கருத்து வெற்றி பெற்றது. இதனால் கேமரூன் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து பிரதமர் பதவிக்கான போட்டியில் இங்கிலாந்து எரிசக்தி மந்திரி ஆண்டிரியா லீட்சம், உள்துறை மந்திரி தெரசா மே ஆகிய 2 பேர் இருந்தனர்.

Theresa May -

இதில் ஆண்டிரியா லீட்சம் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் தெரசா மே இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக தேர்வு செய்யப்படுவது உறுதியானது.

Theresa May visited the Queen

இந்த நிலையில் பிரதமர் டேவிட் கேமரூன் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட ராணி எலிசபெத், புதிய பிரதமராக தெரசா மேவை நியமித்தார். அதையடுத்து, தெரசா மே நேற்று இரவு பதவி ஏற்றார். 59 வயதான தெரசா மே இங்கிலாந்தின் 2–வது பெண் பிரதமர் ஆவார். இதற்கு முன்பு மார்க்கரெட் தாட்சர் முதல் பிரதமர் என்ற பெருமையை பெற்றார்.

Related Posts