இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக மஹேல நியமனம்!

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் துடுப்பாட்ட வீரருமான மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

Mahela-Jayawardene

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதும் டெஸ்ட் தொடருக்கான துடுப்பாட்ட ஆலோசகராக இவர் செயற்படுவார் என இங்கிலாந்து கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் துபாயில் இடம்பெறவுள்ளது. அதேவேளை இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் போல் கொலிங்வூட் ஒரு நாள் மற்றும் 20க்கு 20 தொடருக்கான துடுப்பாட்ட ஆலோசகராக செயற்படுவார் என்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இரு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 13ம் திகதி அபுதாபியில் நடைபெறவுள்ளது. ஒக்டோபர் 22ஆம் திகதி இரண்டாவது டெஸ்ட் போட்டியும் , மூன்றாவது டெஸ்ட் போட்டிகள் நவம்பர் 1ம் திகதி இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts