இங்கிலாந்துக்கு வெற்றி : தொடரையும் கைப்பற்றியது

இலங்கை இங்கிலாந்துக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி டக்வத்லுவிஸ் அடிப்படையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

246325.3

இதன் அடிப்படையில் 2 – 0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது.

லண்டன் – கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

போட்டியின் இடையில் மழை குறுக்கிட்டதால் போட்டி 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

இதன்படி துடுப்புடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு தனுஷ்க குணதிலக்க 62 ஓட்டங்களையும், குஷல் மென்டீஸ் 77 ஓட்டங்களையும், தினேஸ் சந்திமால் 63 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

அத்துடன் மெத்தியூஸ் 67 ஓட்டங்களை விளாசி ஆட்டமிழக்காது இறுதி வரை களத்தில் இருந்தார்.

இதற்கமைய நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் இலங்கை 5 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 305 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதனையடுத்து டக்வத்லூவிஸ் முறைப்படி 308 என்ற வெற்றி இலக்கு இங்கிலாந்துக்கு நிர்ணயிக்கப்பட்டது

பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 40.1 ஓவர்கள் நிறைவில் 309 ஓட்டங்களை பெற்று 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுபெற்றது.

ஜேசன் ரோய் 162 ஓட்டங்களையும் ஜோ ரூட் 65 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் நுவன் பிரதீப் 2 விக்கெட்டுக்களை பெற்றார்.

ஆட்டத்தின் சிறப்பாட்டக்காரராக ஜே.ஜே. ராய் (இங்கிலாந்து) தெரிவு செய்யப்பட்டார்.

Related Posts