ஆஸ்திரேலியாவில் ஒரு முக்கிய விசாரணையில் அங்கு பல தசாப்தங்களாக ரோமன் கத்தோலிக்க திருச்சபையால் நடத்தப்பட்ட மிகப்பெரிய அளவிலான குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் தெரியவந்துள்ளது.
பொது விசாரணையின் தொடக்கத்தில், சுமார் 2000 குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டதாகவும் மேலும் அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 4.500 பேர் என்றும் ராயல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சில கத்தோலிக்க மத குழுக்களைச் சேர்ந்த 20 சதவீதத்திற்கும் அதிகமானோர் இதில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆறு பேராயர்கள் உட்பட ஆஸ்திரேலியாவின் முக்கிய கத்தோலிக்க அதிகாரிகள், ஆணையத்திற்கு ஆதாரங்களை வழங்கவுள்ளனர்
அதில் ஒருவரான அடிலெய்ட் பேராயர் மீது குழந்தை பாலியல் துன்புறுத்தல் குற்றத்தை மறைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.