ஆஸ்திரேலியா செல்கிறார் சிங்கம் சூர்யா!

வேல், ஆறு, சிங்கம், சிங்கம்-2 படங்களை அடுத்து ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ஐந்தாவது படம் எஸ்-3. இந்த படத்திலும் சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார்.

suriya-s3

இன்னொரு நாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்கும் இந்த படத்தில் உலக அளவில் பரவிக்கிடக்கும் சமூக விரோதிகளை களை எடுக்கும் அதிரடி போலீசாக நடிக்கிறார் சூர்யா.

ஏற்கனவே இரண்டு பாகங்கள் உருவாகி வெற்றி பெற்று விட்ட நிலையில், மூன்றாவது பாகத்தையும் ஹிட் பண்ணி விட வேண்டும் என்று இந்த படத்துக்காக அதிகமாக மெனக்கெட்டு வருகிறார் ஹரி.

இந்த படத்தின் படப்பிடிப்பை சென்னை, விசாகப்பட்டினம், தூத்துக்குடி, காரைக்குடி, ஹாங்காங் என பல பகுதிகளில் நடத்தி வந்த ஹரி, தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டார்.

இந்த மாதம் இறுதிகட்ட படப்பிடிப்புக்காக எஸ்-3 டீம் ஆஸ்திரேலியா செல்கிறார்கள். இதில் பெரும்பாலும் வெளிநாட்டு நடிகர்களே நடிக்கிறார்களாம். அதோடு, வானைத் தொட்டு நிற்கும் சில உயரமான பில்டிங்குகளில் வில்லன்களை சூர்யா துரத்திக்கொண்டு செல்லும் காட்சிகளும் படமாக்கப்பட உள்ளதாம்.

Related Posts