ஆஸ்திரேலியாவில் ஆட்டம் போடும் மாஜி ஹீரோயின்கள்

மாஜி ஹீரோயின்களான ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுஹாசினி ஆகியோர் தற்போது ஆஸ்திரேலியாவில் முகாமிட்டு ஊர்சுற்றி ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சுற்றுலா எதுவும் செல்லவில்லை. ஜேம்ஸ் வசந்தன் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

rathika-kushboo-orvasi-nathyyaaa

வானவில் வாழ்க்கை படத்திற்கு பிறகு இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கும் படம் இது. ஆஸ்திரேலியாவில் செட்டிலாகிவிட்ட நான்கு நடுத்தர வயது பெண்களின் வாழ்க்கையை காமெடியாக சொல்கிற படம். அங்கு அவர்கள் செய்யும் கலாட்டாக்கள்தான் திரைக்கதை.

படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. முழு படமும் ஆஸ்திரேலியாவில் படமாகிறது. மாஜி ஹீரோயின்கள் அங்கேயே தங்கியிருந்து முழு படத்தையும் ஒரே ஷெட்யூலில் முடித்துக் கொடுத்துவிட்டுத்தான் இந்தியா திரும்புகிறார்கள்.

Related Posts