ஆஸ்திரியாவில் அஜித் பட ஷுட்டிங்

அஜித் தற்போது நடித்து வரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு ஆஸ்திரியா நாட்டில் நடந்து வருகிறது. அங்குள்ள எல்லையோரப் பகுதிகளில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு ஆக்ஷன் காட்சிகளில் அஜித் நடித்து வருகிறார். அந்தப் படப்பிடிப்புப் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகப் பரவி வருகிறது. பார்ப்பதற்கு அஜித் நடித்த ‘ஆரம்பம்’ படத்தின் புகைப்படம் போலவே இருக்கிறது. இந்தப் படத்திலும் அஜித் நரைத்த தலைமுடியுடன் நடிப்பது ரசிகர்களுக்குக் கொஞ்சம் அதிர்ச்சிதான்.

ajith

‘மங்காத்தா’ படத்தில் வெங்கட் பிரபு ஆரம்பித்து வைத்த ‘சால்ட் அன்ட் பெப்பர்’ தோற்றம் தொடர்ந்து “வீரம், என்னை அறிந்தால், வேதாளம்” படம் வரை தொடர்ந்தது. புதிய படத்திலாவது அஜித் இளமையான தோற்றத்தில் நடிப்பார் என அவருடைய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அஜித் இதிலும் நரைத்த தலையுடன் ‘சால்ட் அன்ட் பெப்பர்’ தோற்றத்தில் நடிப்பது அவருடைய ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே இருக்கிறது.

ரசிகர்களும், படம் பார்க்கும் ரசிகர்களும் என்ன நினைக்கிறார்கள் என்பது தற்போது அஜித்துக்கு அதிகம் தெரியாமலிருக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தன்னைச் சுற்றி ஒரு வளையத்தை அஜித் ஏற்படுத்திக் கொண்டுவிட்டார் என்கிறார்கள்.

Related Posts