சினிமா உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் மேட் மேக்ஸ் ப்யூரி ரோட் படம் அதிகபட்சமாக 6 விருதுகளை பெற்றுள்ளது.
இவ்விழாவில் இந்தியா தரப்பில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டுள்ளார். இவர், சிறப்பு ஒளிப்பதிவாளராக தேர்வு செய்யப்பட்ட இம்மானுவேல் லுபெஸ்கிக்கு விருது வழங்கினார்.
ஆஸ்கார் விருது விபரம் :
சிறந்த நடிகர் : லியார்னோ டி கேபிரியோ – ‘தி ரெவனென்ட்’
சிறந்த நடிகை : பிரீ லார்சன் ‘ரூம்’
சிறந்த படம் : ‘ஸ்பாட் லைட்’
சிறந்த இயக்குநர் : அலெக்ஸாண்ட்ரோ ஜி இனாரிட்டு – ‘தி ரெவனென்ட்’
சிறந்த திரைக்கதை – டாம் மெக்கார்தி, ஜாஸ் சிங்கர் (ஸ்பாட் லைட்)
சிறந்த தழுவல் திரைக்கதை – சார்லஸ் ராண்டோல்ப், ஆடம் மெக்காய் (தி பிக் ஸ்பார்ட்)
சிறந்த கலை இயக்கம் – கோலின் கிப்சன், லிசா தாம்ஸன்(மேட் மேக்ஸ்-ப்யூரி ரோட்)
சிறந்த கலை இயக்குனர் – கோலின் கிப்சன் மற்றும் லிசா தாம்ஸன் (மேட் மேக்ஸ்-ப்யூரி ரோட்)
ஒப்பனை மற்றும் சிகை அலங்கார விருது – லெஸ்லீ வேண்டர்வால்ட், எல்கா வார்டேகா மற்றும் டேமியன் மார்ட்டின்(மேட் மேக்ஸ் – ப்யூரி ரோட்)
சிறந்த ஆடை வடிவமைப்பு – ஜென்னி பீவன் (மேட் மேக்ஸ்-ப்யூரி ரோட்)
சிறந்த துணை நடிகை – அலிசியா விகாண்டர் (தி தனிஷ் கேர்ள்)
சிறந்த துணை நடிகர் – மார்க் ரைலன்ஸ் (ப்ரிட்ஜ் ஆப் ஸ்பைஸ்)
சிறந்த ஒளிப்பதிவு – இம்மானுவேல் லுபெஸ்கி (தி ரெவனென்ட்)
சிறந்த படத்தொகுப்பு – மார்கெரட் சிக்ஸல் (மேட் மேக்ஸ்-ப்யூரி ரோட்)
சிறந்த ஒலி தொகுப்பு- மார்க் ஏ.மன்கினி, டேவிட் வொயிட் (மேட் மேக்ஸ்-ப்யூரி ரோட்)
சிறந்த ஒலிக்கலவை – கிரிஸ் னென்கின்ஸ், கிரேக் ருட்லூஃப், பென் ஒஸ்மோ
சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ் – மார்க் வில்லியம்ஸ் ஆர்டிங்டன், சரா பென்னெட், பால் நோரீஸ், ஆண்ட்ரூ வொய்ட்ஹர்ஸ் (எக்ஸ் மெசினா)
சிறந்த அனிமேஷன் குறும்படம் – பாடோ எஸ்காலா, கேப்ரியல் ஒசோரியோ வார்காஸ் (பியர் ஸ்டோரி)
சிறந்த அனிமேஷன் படம் – பீடே டாக்டர், ஜோனாஸ் ரிவேரா(இன்சைட் அவுட்)
சிறந்த ஆவண குறும்படம் – ‘எ கேர்ள் இன் தி ரிவர்’
சிறந்த ஆவணப்படம் : ‘எமி’ (விருது பெற்றவர்கள் : ஆசிப் கப்பாடியா மற்றும் ஜேம்ஸ் ரே)
சிறந்த வெளிநாட்டு படம் : ‘சன் ஆப் சவுல்’ – ஹங்கேரி நாட்டு படம்
சிறந்த இசை : என்னியோ மோரிகோன், படம்: ‘தி ஹேட்புல் எயிட்’
சிறந்த பாடல் : ரைட்டிங்ஸ் ஆப் தி வால்… ‘ஸ்பெக்டர்’