87 -வது ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ரஹ்மானின் பெயர் இடம்பெறவில்லை. அதனால் அவர் ஆஸ்கர் வெல்வார் என எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
ரஹ்மான் இசையமைத்த, ஹன்ட்ரட் புட் ஜர்னி, மில்லியன் டாலர் ஆர்ம், கோச்சடையான் ஆகிய படங்கள் ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலுக்கு தகுதியான படங்களின் பட்டியலில் இருந்தன. ஆனால் அவை பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறவில்லை.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ரஹ்மான், எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இருக்கவில்லை. கடவுள் என்னிடம் கருணையாக உள்ளார் என கூறினார்.