ஆஸ்கருக்கு செல்லும் தோனி!

இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியின் வாழ்க்கை படம் ஆஸ்கர் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

இந்திய ஒருநாள் அணியின் வெற்றிக்கேப்டன் தோனி. இவரது வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டு, சமீபத்தில் வெளியானது.

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா முழுவதும் வெளியான இப்படம் ஃபாக்ஸ் ஸ்டார் தயாரிப்பில், நீரஜ் பாண்டே இயக்கத்தில், பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்து வெளியானது.

இந்தியா முழுவதும் மாஸ் ஹீரோ படத்துக்கு கிடைக்கும் வரவேற்பும் உற்சாகமும் இந்த படத்துக்கும் கிடைத்தது. முதல் வாரத்தில் ரூ. 100 கோடி வசூலை எட்டிய இந்த படம், உலகளவில் ரூ. 215 கோடியை வசூல் செய்து அசத்தியது.

இவ்வளவு சாதனைகளை படைத்த இந்த படம் தற்போது ஆஸ்கர் விருதுக்கான 336 படங்கள் இடம் பெற்றுள்ள பட்டியலில் சேர்ந்துள்ளது.

Related Posts