ஆஸி.க்கு செல்ல முற்பட்ட ஆறு இலங்கை அகதிகள் இந்தியாவில் கைது

தமிழக அகதி முகாம்களில் இருந்த ஆறு இலங்கையர்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட போது கைதாகியுள்ளனர்.

கொச்சி பொலிஸாரால் முனம்பம் பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

மேலும் இவர்களுடன் நான்கு இந்தியர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Related Posts