ஆஸி.க்கு ஆட்களை கடத்திய படகோட்டிகளுக்கு சிறை

இந்தோனேசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு ஆட்களை கொண்டுசெல்லும் வழியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியேறிகள் கடலில் மூழ்கி உயிரிழக்கக் காரணமான மனிதக் கடத்தல் நடவடிக்கை ஒன்றுடன் கொண்டிருந்த தொடர்புக்காக இரண்டு இந்தோனிசியர்களுக்கு நீண்ட சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

asylum_boat_australia

சிறிய மரப் படகு ஒன்றில் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு ஆட்களைக் கொண்டு செல்லும் வழியில் இந்து சமுத்திரத்தில் இந்தப் படகு கவிழ்ந்தது.

அந்த படகோட்டிகளுக்கே ஆஸ்திரேலியாவின் பேர்த் நகர நீதிமன்றத்தில் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

ஒருவருக்கு 9 ஆண்டுகளும் மற்றையவருக்கு 6 ஆண்டுகளும் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இந்தப் படகு விபத்தின்போது நூற்றுக்கும் மேற்பட்டவர்களை ஆஸ்திரேலிய அதிகாரிகள் காப்பாற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts