அவுஸ்திரேலியாவின் மெல்பேன் நகரில் மற்றுமொரு இலங்கை அகதி தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்த தீர்மானிக்கப்பட்டதன் காரணமாக இந்நபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்நபர் தனது வீட்டில் பெற்றோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த அகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்த தீர்மானிக்கப்பட்டு தற்கொலைக்கு முயற்சித்த இரண்டாவது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
40 வயதான இந்நபர் 2012ஆம் ஆண்டு படகு மூலம் அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.
இலங்கை பாதுகாப்பு பிரிவினர் தன்னை தாக்கி கால்களை உடைத்ததாக கூறி குறித்த நபர் அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து கோரியுள்ளார்.
நாடு கடத்தப்படுபவர்கள் குறித்து தான் அவதானித்து வருவதாக அவுஸ்திரேலிய தமிழ் அகதிகள் சபையின் பேச்சாளர் சாமி தெரிவித்துள்ளார்.
நாடு கடத்தப்படுபவர்கள் இலங்கையில் சித்திரவதைகளை அனுபவிப்பதாகவும் அதற்குப் பதில் இங்கேயே இறக்கலாம் என அவர்கள் சிந்திப்பதாகவும் சாமி மேலும் குறிப்பிட்டுள்ளார்.