ஆஸியில் இலங்கையர் படுகொலை: 3 நேபாளிகள் கைது

தெற்கு அவுஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவரை படுகொலை செய்ததாக நேபாள பிரஜைகள் மூவர் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் 44, 48 மற்றும் 34 வயதானவர்கள் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வட அடிலெய்ட் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், 39 வயதான குறித்த இலங்கையரின் சடலத்தை கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை, சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், எவரும் பிணை கோரி விண்ணப்பிக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.

Related Posts