ஆஸிக்கெதிரான 2 ஆவது போட்டியும் இந்தியா வசம்

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியில் 50 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி கொல்கத்தாவின் ஈடன்காடன் மைதானத்தில் இடம்பெற்றது.

இப் போட்டியில் நாணயச் சுழற்சியில்வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ஓட்டங்களைப்பெற்றது.

இந்திய அணிசார்பாக அணித் தலைவர் ஹோலி 92 ஓட்டங்களையும் ரஹானே 55 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

அவுஸ்திரேலிய அணி சார்பாக பந்துவீச்சில் கௌல்டர் நில் மற்றும் ரிச்சட்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 253 ஓட்டங்களைப்பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிய, 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்மது 202 ஓட்டங்களைப்பெற்று 50 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

அவுஸ்திரேலிய அணி சார்பாக துடுப்பாட்டத்தில் ஸ்டெய்னிஸ் ஆட்டமிழக்காது 62 ஓட்டங்களையும் அணித் தலைவர் ஸ்மித் 59 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்திய அணிசார்பில் பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் இரு போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ள இந்திய அணி 2-0 என தொடரில் முன்னிலைபெற்றுள்ளது.

Related Posts