ஆவா குழு தலைவர் கைது!

ஆவா குழுவின் பிரதான தலைவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் 8 தலைவர்களை கைது செய்யும் நடவடிக்கை தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருவதாக சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்நாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வட மாகாணத்தில் இயங்கும் ஆவா இராணுவத்தினரால் வழிநடத்தப்படுவதில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க வடக்கில் செயற்படும் ஆவா என்ற குழு தொடர்பாக நேற்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

இதற்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க பதிலளிக்கையில்,

2011ஆம் ஆண்டு இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலின் பின்னர் ஒரு குழு ஆவா என்ற பெயரால் அடையாளப்படுத்தி செயற்பட ஆரம்பித்துள்ளது. இதன் பெரும்பாலான அங்கத்தவர்கள் 18 வயதிற்கும் 25 வயதிற்கும் இடைப்பட்டவர்களாவர். கொள்ளை, அச்சுறுத்தல், தாக்குதல், கப்பம் வாங்குதல் போன்ற நடவடிக்கைகளில் இந்தக் குழு மேற்கொண்டு வந்திருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் உரையாற்றுகையில் இந்தக் குழுவைச்சேர்ந்த உறுப்பினர்கள் ஒப்பந்த அடிப்படையில் குற்றங்களை செய்துள்ளனர். சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். வேறு சிலர் தண்டப்பணம் செலுத்தியதன் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த கால பகுதியில் இவர்கள் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டு தங்கிருந்தவர்களுடன் நெருங்கிய உறவினை முன்னெடுதுள்ளனர். ஆவா குழுவில் 60 பேர் உள்ளனர். இவர்களில் 38 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஆறு பேர் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. 30 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆவா குழு இராணுவத்தால் வழிநடத்தப்படுவதில்லை என்று விவாதத்தில் கலந்து கொண்ட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார்.இது தொடர்பாக மேலும் உரையாற்றுகையில் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவர் குழுவில் இணைந்திருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன குறிப்பிட்டார்.

ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே, பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில்

ஏலக்காய் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த அரசாங்கம் நடைமுறைப்படுத்திய தவறான கொள்கைகளினால் ஏலக்காய் உற்பத்தி வீழ்ச்சி கண்டது. தனியார் துறை வர்த்தகர்களுக்கு உதவ அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக உலக வங்கியின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்படும். செய்கையாளர்களுக்கு பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் இரண்டாயிரத்து 800 ஹெக்டெயர் விஸ்தீரனமான நிலப்பரப்பில் ஏலக்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. இரண்டாயிரத்து 500 அடி உயரத்திற்கும் மேற்பட்ட நிலப்பரப்புக்களில் மாத்திரமே ஏலக்காயை உற்பத்தி செய்ய முடியும். ஏலக்காய் உற்பத்தி கடந்த ஆண்டு 91 ஆயிரம் கிலோவாக பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Related Posts