ஆவா குழு உறுப்பினர்கள் நான்கு பேர் கைது

கொடிகாமம் பகுதியில் ஆவா குழு உறுப்பினர்கள் நான்கு பேரை கொடிகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் 18 முதல் 25 வயது மதிக்கத்தக்கவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சந்தேகநபர்களிடமிருந்து இரண்டு வாள்கள், இரண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் சில ஆயுதங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கொடிகாமம் பகுதியில் திடீரென பொலிஸார் மேற்கொண்ட வீதி நடவடிக்கையின்போதே குறித்த சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களை கொடிகாமம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related Posts