யாழ்ப்பாணத்தில் ஆவா குழு உறுப்பினர்கள் ஐந்து பேரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாவகச்சேரி அல்லாரை, மட்டுவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பிலலேயே இந்த ஐந்து பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் 19 வயதிற்கும் 21 வயதிற்கும் உட்பட்டவர்கள் என பொலிஸாரின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
அத்துடன் இந்த ஐந்து பேரும் ஆவா குழுவுடன் ஏற்கனவே தொடர்புகளை வைத்திருந்ததாக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் எஸ். ஸ்ரனிஸ்லஸ் தெரிவித்துள்ளார்.
இவர்களை சாவகச்சேரி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.