வடக்கில் இயங்கும் “ஆவா” எனப்படும் குழு முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு தெரிந்தே உருவாக்கப்பட்ட கொள்ளைக் குழு என, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த குழுவினர் இன்று வரை முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் தேவைகளுக்கு அமையவே செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் குறித்த குழுவை கட்டியெழுப்பிய பிரிகேடியரை தனக்குத் தெரியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
அக் காலப் பகுதியில் இருந்த வேறு சில தமிழ் குழுக்களை அழிக்க இந்தக் குழு உருவாக்கப்பட்டிருக்கலாம் என இதன்போது கூறிய அவர், எனினும் தற்போது அவ்வாறானதொரு குழு அவசியம் அற்றது எனவும் தெரிவித்துள்ளார்.