ஆவா குழுவை அழிக்க புதிய குழு- ராவணா பலய

வடக்கில் இடம்பெறும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய  “ஆவா“ குழுவினை கட்டுப்படுத்த தாம் புதிய குழு ஒன்றை உருவாக்கவுள்ளதாக ராவணா பலய அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆவா குழுவின் நடவடிக்கையை கட்டுப்படுத்தவோ, அந்த குழுவின் உறுப்பினர்களை கைது செய்யவோ பொலிஸார் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் பொலிஸாரின் நடவடிக்கைகளை தாம் நிறைவேற்றப் போவதாகவும் “ஆவா“ குழுவினை கட்டுப்படுத்த புதிய குழு ஒன்றை உருவாக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ஆவா குழுவினை கட்டுப்படுத்த வட மாகாண பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமை ச்சர் சாகல ரத்நாயக்க கடந்த வாரம் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts