ஆவா குழுவினருக்கு 31வரை விளக்கமறியல்

jail-arrest-crimeயாழ்ப்பாணத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த ஆவா கும்பலை எதிர்வரும் 31ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் மு.திருநாவுக்கரசு இன்று (17) உத்தரவிட்டுள்ளார்.

யாழ். மாவட்டத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த ஆவா குழுவும் அவர்களது தலைவரும் கடந்த 6ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் மேற்படி வழக்கு இன்று (17) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஆவா குழுவினரை பிணையில் விடும்படி யாழ். மாவட்ட சட்டத்தரணிகள் பலர் நீதிமன்றில் ஆஜராகி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஸ்ரீநிக சஞ்சீவ ஜெயக்கொடி ஆட்சேபனை தெரிவித்ததினைத் தொடர்ந்து வழக்கினை பதில் நீதவான் பிற்பகலிற்கு ஒத்திவைத்தார்.

தொடர்ந்து மீண்டும் பிற்பகலில் வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பதில் நீதவான், ஆவா கும்பலை எதிர்வரும் 31ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இதுவரையிலும் அந்தக் குழுவினைச் சேர்ந்த 13பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அந்தக் குழுவுடன் தொடர்புபட்ட இன்னும் பலரைத் விசேட பொலிஸ் குழுவொன்று தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

‘ஆவா’ குழுவினருக்கு விளக்கமறியல்

‘ஆவா’ குழு பின்னணியில் இராணுவம்: சிவாஜிலிங்கம்

‘ஆவா’ குழு தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் முறையிடவும் – பொலிஸார்

Related Posts