ஆவரங்கால் இந்து இளைஞர் சம்பியன்

யாழ். மாவட்ட கரப்பந்தாட்ட சங்கம் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையே நடத்திய ஆண்களுக்கான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது.

மேற்படி சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி அச்சுவேலி ஸ்ரார் விளையாட்டுக்கழக மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்றது.

இதில், ஆவரங்கால் மத்தி விளையாட்டுக் கழகமும் ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக் கழகமும் மோதிக் கொண்டன.

ஐந்து சுற்றுக்கள் கொண்ட இப் போட்டியில், முதல் மூன்று நேர் சுற்றுக்களையும் ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக் கழகம், 25:23, 25:21, 25:22 என்ற நேர் செற்களில் வென்று சம்பியனாகியது.

Related Posts