போர்க் குற்றத்துடன் தொடர்புடைய இராணுவ அதிகாரியை மீண்டும் வடமாகாண ஆளுனராக நியமித்துள்ளமை மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
யாழ். தமிழரசு கட்சி அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்ற அ.அமிர்தலிங்கத்தின் நினைவு தினத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் நல்லிணக்க சமிக்சையாக நாம் கேட்டு கொண்டதற்கு இணங்க வடமாகாண ஆளுனராக வேறு ஒருவரை நியமிக்கும் என நாம் எதிர்பார்த்தோம்.
வடமாகாண ஆளுனரின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து புதியதாக ஒரு ஆளூநர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்த்த போது மீண்டும் அதே ஆளுனரையே அரசாங்கம் நியமித்துள்ளது அது எமக்கு பெரும் ஏமாற்றம் அளித்துள்ளது.
தமிழ் மக்களுக்கு விருப்பமில்லாத போர்க்குற்றத்துடன் தொடர்புடைய ஆளுனரை மீண்டும் வடமாகாணத்திற்கு நியமித்ததன் ஊடாக தமிழ் மக்களின் அபிலாசைகள், ஜனநாயக தீர்ப்பு என்பவற்றை இலங்கை அரசாங்கம் மதிப்பதில்லை என்பது நிரூபனமாகியுள்ளது என அவர் தெரிவித்தார்.