ஆளும் கட்சி வேட்பாளர்களுடையே மோதல்! அங்கஜனை இலக்குவைத்து துப்பாக்கிச்சூடு?

angajanஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமாகாண வேட்பாளர் அங்கஜனை இலக்குவைத்து துப்பாக்கிப்பிரயோகமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சாவகச்சேரியில் வைத்தே இந்த துப்பாக்கிப்பியோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும். அதிலிருந்து அவர் தப்பிவிட்டதாகவும் அவருக்கு பாதுகாப்பு வழகிய பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முடித்துக்கொண்டு யாழ்.நோக்கி திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீசாலையில் வீடு வீடாக சென்று தேர்தல் பிரசாரங்களை முடித்துக்கொண்டு திரும்பும்போதே இந்த துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் தனக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்த வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் மற்றுமொரு வேட்பாளரே இந்த துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts