ஆளும் கட்சி வெற்றி பெற்றால் தமிழர்கள் பாதக விளைவுகளையே சந்திப்பர்: சம்பந்தன்

sambanthan 1_CIவட மாகாண சபை தேர்தலில் ஆளுங் கட்சி வெற்றி பெற்றால் தமிழ் மக்கள் பாதகமான விளைவுகளையே சந்திப்பார்கள் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ஆகவே தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்து தமது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கான வழிகளினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

“அபிவிருத்தி என்பது வீதிகளையும் பாலங்களையும் கட்டுதல் அல்ல. அது மக்களை அபிவிருத்தி செய்தலேயாகும். ஆளும் தரப்பு தற்போது வீதிகளினை அபிவிருத்தி செய்து அதனை அபிவிருத்தி என்று சொல்லி வருகின்றது.

தேர்தலுக்காக அவர்கள் பயன்படுத்தும் ஒரே வார்த்தை அபிவிருத்தி என்பது தான். இதனால் மாகாண சபை தேர்தல் மக்கள் 80 தொடக்கம் 90 சதவீதமானவர்கள் வாக்களிக்கும் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றிபெறும்.

மக்கள் தங்கள் தற்போதய நிலைகளிலிருந்து கொண்டு இந்த தேர்தலில் வாக்களித்து தங்கள் அரசியற் பிரச்சினைகளை சர்வதேச உதவியுடன் தீர்க்க முடியும்” என்றார்.

Related Posts