ஆளுமா டோளுமா போன்று சிவகார்த்திகேயனுக்கு பாடல் ரெடி பண்ணிய அனிருத்!

3 படத்தில் அனிருத் கம்போஸ் செய்த ஒய்திஸ் கொலவெறி பாடல் சிவகார்த்திகேயனை மிகவும் கவர்ந்த பாடல் என்பதால், அதன்பிறகு அவர் நடித்த பல படங்களுக்கு அனிருத் இசையமைத்தார்.

siva-karththekeyan-aniruth

அந்த வகையில், மான்கராத்தேயில் அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் பாடிய ராயபுரம் பீட்டரு உள்ளிட்ட சில பாடல்கள் சூப்பர் ஹிட்டானது. அதனால் இப்போது மீண்டும் சிவகார்த்திகேயன் நடிக்கும் ரெமோ படத்துக்கும் இசையமைக்கும் அனிருத், அவருக்காக ஒரு அதிரடியான பாடலை உருவாக்கியுள்ளாராம்.

அதாவது, வேதாளம் படத்தில் அஜீத்துக்காக உருவாக்கிய ஆளுமா டோளுமா பாடலைப்போன்று ரெமோ படத்திலும் சிவகார்த்திகேயனுக்காக ஒரு அதிரடியான பாடலை உருவாக்கியிருக்கிறாராம்.

இந்த படத்திற்கான பாடல்களை கம்போஸ் செய்து முடித்து விட்ட அனிருத், அந்த பாடலை சிவகார்த்திகேயனையே பின்னணியும் பாட வைக்கிறாராம்.

மேலும், தற்போது அப்படம் இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டதால், மே மாதம் ஆடியோவை வெளியிடும் வேலைகள் நடக்கிறது. அதனால் ஏற்கனவே சில பாடல்களை முடித்து விட்ட அனிருத், மீதமுள்ள பாடல்களுக்கு இசையமைக்க தினமும் இரவு நேரங்களில் இசைப்பணியை விறுவிறுப்பாக நடத்தி வருகிறாராம்.

Related Posts