கடந்த ஐந்து வருடங்களாக வடக்கு ஆளுநர், பிரதம செயலர் சட்டவிரோதமாகவே பதவியில் இருந்துள்ளனர் முன்னால் நீதியரசரும் வடக்கு முதலமைச்சருமான விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மாகாண சபை அமைக்க முன்னரே வடக்கில் ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர் ஆகியோர் இருந்துள்ளனர். எனவே மாகாண சபை உருவாகிய பின்னர் அவர்களை மாற்றுமாறு கோருவதை ஏற்றுக் கொள்ள முடியாது என வடக்கு மாகாணசபையின் எதிர்க் கட்சித் தலைவர் நேற்று முன்தினம் கூறினார்.
இதற்கு நேற்றய தினம் விடை கொடுத்த வடக்கு முதல்வர், 13ஆம் திருத்த சட்டத்தின்படி மாகாண சபை உருவாவதற்கு முன்னர் ஆளுநர் பதவியே அல்லது பிரதம செயலாளர் பதவியே மாகாண சபைக்களுக்கு வழங்க முடியாது.
அவ்வாறு இருக்க முடியுமானால் ஜனாதிபதியின் தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றம் பிரநிதியாகவே இருக்க முடியும். எனவே வடக்கு மாகாண சபை அமைக்க முதல் அவர்கள் இருந்திருந்தால் நீதிமன்றத்தினை நாடி தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டார்.