ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியினால் தமிழ்,பௌத்த அறநெறி பாடசாலைக்கு கணினி கையளிப்பு

யாழ்.உடுவில் நந்தாறாம தமிழ், பௌத்த அறநெறி பாடசாலைக்கு கணினி மற்றும் பிரின்டர் இயந்திரம் கையளிக்கும் நிகழ்வு வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று இரவு இடம்பெற்றது.வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியினால் இவ் உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.

இவ் அறநெறி பாடசாலையில் கற்கும் 52 மாணவர்களின் கணினி கல்வியை மேம்படுத்தும் நோக்கில், வடமாகாண ஆளுநரிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க இவ் உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.

அத்துடன், மாணவர்களுக்கு விடுமுறை காலம் என்பதனால் கல்வி சுற்றுலா ஒன்றினை ஏற்படுத்தி தருமாறு மாணவர்கள் இதன்போது கோரிக்கை ஒன்றினை முன்வைத்தனர்.

இக்கோரிக்கையினை கவனத்தில் கொண்ட ஆளுநர் எதிர்வரும் 25, 26 ஆம் திகதிகளில் அநுராதபுரத்திற்கான கல்வி சுற்றுலா ஒன்றிற்கான போக்குவரத்து ஏற்பாடுகளை செய்து தருவதாக உறுதியளித்துள்ளார்.

இந்நிகழ்வில், யாழ். நாகவிகாரை பௌத்த தேரர் உட்பட தமிழ், பௌத்த சங்க நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் நந்தாறாம தமிழ் பௌத்த சங்க நிர்வாகத்தினர் என பலர் கலந்து கொண்டனர்.

Related Posts