ஆளுநர்கள் பிரச்சாரங்களில் ஈடுபடமுடியாது – தேர்தல் ஆணையாளர்

mahinda-deshpriyaஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரப் பணிகளில் மாகாண ஆளுநர்கள் ஈடுபடக் கூடாது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் மாகாண ஆளுநர்கள் தமது சட்டதிட்டங்களுக்கு மாறாக நடந்து கொள்ளக் கூடாது எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இருப்பினும் வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி, மற்றும் வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ பலல்ல அகியோர் ஆளும் கட்சி சார்பில் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்பதாக குற்றச் சாட்டுக்களுக்காக முன்வைக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் மாகாணசபை கலைக்கப்பட்டதன் பின்னர் அவற்றின் நிறைவேற்று அதிகாரம் ஆளுநருக்கு உரியது.

எனவே ஆளும் கட்சி தேர்தல் பிரச்சாரப் பணிகளில் ஆளுநர்கள் பங்கேற்பதனை தவிர்ப்பதுடன் எதிர்காலத்தில் இவ்வாறு செயற்படக் கூடாது எனவும் கட்சி செயலாளர்கள் ஊடாக அறிவித்துள்ளேன் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். –

Related Posts