ஆல் ஸ்டார்ஸ் கிரிக்கெட்: சச்சின் – வார்ன் அணிகள் இன்று மோதல்

அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் வகையில் சச்சின் டெண்டுல்கர், ஆஸ்திரேலிய சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்ன் ஆகியோர் இணைந்து ஆல் ஸ்டார்ஸ் டி20 கிரிக்கெட் தொடரை நடத்துகிறார்கள்.

cricket-all-star

3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டி நியூயார்க் நகரில் உள்ள சிட்டி பீல்டு மைதானத்தில் இந்திய நேரப்படி சனிக்கிழமை இரவு 11.30 மணிக்குத் தொடங்குகிறது.

சச்சின் தலைமையில் ஓர் அணியும்,ஷேன் வார்ன் தலைமையில் ஓர் அணியும் களமிறங்குகின்றன. இந்த அணிகளில் இடம்பெற்றுள்ள அனைவரும் ஓய்வு பெற்ற வீரர்கள் ஆவர்.

சச்சின் அணிக்கு சச்சின் பிளாஸ்டர்ஸ் என்றும், வார்ன் அணிக்கு வார்ன் வாரியர்ஸ் என்றும் பெயரிடப்பட்டுள்ளன.

சச்சின் பிளாஸ்டர்ஸ்: சச்சின் டெண்டுல்கர் (கேப்டன்), வி.வி.எஸ்.லட்சுமண், செளரவ் கங்குலி, வீரேந்திர சேவாக், பிரையன் லாரா, மஹேல ஜெயவர்த்தனா, கார்ல் கூப்பர், லான்ஸ் குளூஸ்னர், ஷான் பொல்லாக், மொயின் கான், கிரீம் ஸ்வான், கிளென் மெக்ராத், முத்தையா முரளீதரன், ஷோயிப் அக்தர், கர்ட்லி அம்புரோஸ்.

வார்ன் வாரியர்ஸ்: ஷேன் வார்ன் (கேப்டன்), மேத்யூ ஹேடன், ரிக்கி பாண்டிங், மைக்கேல் வாஹன், ஜாக்ஸ் காலிஸ், குமார் சங்ககாரா, ஆன்ட்ரூ சைமண்ட்ஸ், ஜான்டி ரோட்ஸ், சக்லைன் முஷ்டாக், வாசிம் அக்ரம், டேனியல் வெட்டோரி, கர்ட்னி வால்ஷ், ஆலன் டொனால்டு, அஜித் அகர்கர்.

Related Posts