‘ஆல்பம்’ மழையில் காதலர் தினம் – பாடல்கள் இணைப்பு

காதலர் தினம் நேற்று வந்தாலும் வந்தது பலரும் தங்களது படங்களின் ஆல்பம், தனி இசை ஆல்பம் என அடுத்தடுத்து வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைத்துவிட்டனர். எது ஒரு படத்தில் இடம் பெற்றுள்ள பாடல், எது தனியாக வெளியிடப்பட்டுள்ள ஆல்பம் என பிரித்துப் பார்க்க முடியாதவாறு எதற்கும் வித்தியாசம் இல்லாமல் ஒரே மாதிரியாக இருந்து ரசிகர்களைக் குழப்பிவிட்டது.

இருந்தாலும் ஒரு சில ஆல்பங்கள் மட்டுமே அதை வெளியிட்டவர்களின் பிரபலத்தால் ரசிகர்களைச் சென்றடைந்தது. பிரபலமில்லாத சில புதியவர்களும் தனியான இசை ஆல்பங்களை நேற்று வெளியிட்டார்கள். ஆனால், அனைத்தும் ஒரே நாளில் வெளியானதால் எதையும் தனியாக அடையாளப்படுத்திப் பார்க்க ரசிகர்களால் முடியவில்லை.

யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் நா.முத்துக்குமார் எழுதிய ‘யாக்கை’ படத்தில் இடம் பெற்ற ‘நீ….’ என்ற பாடல் திரையிசை ரசிகர்களை நேற்றுக் கவர்ந்த ஆல்பமாக இருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு யுவனின் தனித்துவமான இசை, குரலில் அந்தப் பாடல் ரசிக்கும்படியான இருந்தது.

அனிருத் இசையமைப்பில் விக்னேஷ் சிவன் எழுதி அனிருத், ஸ்ரீநிதி வெங்கடேஷ் பாடிய தனி இசை ஆல்பமாக ‘அவளுக்கென’ என்ற ஆல்பம் யூ டியூபில் வெளியிடப்பட்டது. இந்தப் பாடல் இளம் ரசிகர்களை அதிகம் ஈர்த்த பாடலாக நேற்று இருந்தது.

இவை தவிர ‘கககபோ’ படத்திலிருந்து ஒரு பாடலும், இன்னும் சில தனி இசை ஆல்பங்களும் நேற்று வெளியாகின. அவற்றின் வரவேற்பு எப்படி இருக்கிறது என்பது இனிமேல்தான் தெரிய வரும்.

Related Posts